search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியிருப்பு பகுதியில் பாம்பு"

    • ஆற்றில் கொண்டு போய் விட்டனர்
    • வீட்டுக்குள் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி மலையில் ராஜா கோட்டை, ராணி கோட்டை ஆகியவை உள்ளது. இந்த மலையில் பாம்பு உள்பட ஏராளமான உயிரினங்கள் உள்ளன.

    அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. மலைப்பகுதிக்கு கீழ் ஏராளமானோர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சாரை பாம்பு ஒன்று வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தேடி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

    அப்போது ஒருவரின் வீட்டுக்குள் ஊர்ந்து சென்றது.

    பாம்பு வருவதை வீட்டுக்குள் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    பின்னர் அப்பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர் பாம்பை லாவகமாக பிடித்தார். பிடிபட்ட பாம்பை ஆற்றில் கொண்டு போய் பத்திரமாக விட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • வனத்துறையினர் மலையடிவாரத்திற்கு அருகில் விடுவதாக புகார்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த மராட்டியபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் வெங்கடேசன் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது நிலத்தில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. உடனே ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர், வனச்சரக அலுவலர்கள் மீட்கப்பட்ட மலை பாம்பை ஒடுகத்தூர் காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.

    குடியிருப்பு பகுதியில் இருந்தும் விவசாய நிலங்களில் இருந்தும் மீட்கப்படும் மலைப்பாம்புகளை வனத்துறையினர் எடுத்துச் சென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் விடாமல் மலையடிவாரத்திற்கு அருகில் விடுகின்றனர்.

    இதனால் இறை தேடி மலைபாம்புகள் மீண்டும் குடியிருப்பு பகுதியை தேடி படையெடுத்து வருவதாக வனத்துறை மீது குற்றம் சாற்றுகின்றன.

    வனத்துறையினர் பிடிப்படும் மலை பாம்புகளை அடர்ந்த காப்பு காட்டுக்குள் பத்திரமாக விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×