search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடற்புழு மாத்திரை"

    • முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி நடைபெறவுள்ளது.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஓன்றியத்துக்குட்பட்ட கோண்டூர் ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகா மினை கலெக்டர் அருண் தம்புராஜ், தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரயை வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 7,01,617 குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுள்ள 2,23,660 பெண்களுக்கு மட்டும் (கர்ப்பிணித்தாய்மார்கள். பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) பயனடைய உள்ளனர். 1 மற்றும் 2 வயது வரை அரை மாத்திரையும், 2 முதல் 30 வயது வரை 1 மாத்திரையும் எடுத்து க்கொள்ள வேண்டும். முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி நடைபெறவுள்ளது. குடற்புழு நீக்க மாத்திரை ஒரே நாளில் அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இக்குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படு வதுடன், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்த சோகையை தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், உதவுகிறது. பொது மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறார்கள். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்க ன்வாடி பணியாளர்களும் வீடுவீடாக சென்று தகவலளித்து குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரவழைத்து இக்குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்ப டுகிறது. இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதாரம்) டாக்டர் மீரா, மற்றும் மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×