search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்"

    • தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
    • ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட மேற்கண்ட இன மக்கள் (ஆண், பெண்) 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

    தையல் தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினர், மிக பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பை சார்ந்த (ஆண், பெண்) மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்து பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டரின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து, தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆணையர், மிகப்பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிற்பான்மையினர் நல இயக்கம், சென்னைக்கு பரிந்துரை செய்யப்படும்.

    இதில் பயன்பெற, குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.

    குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
    • கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    பயிர் கடனாக தனிநபர் பிணையத்தின் பேரில் ரூ.1.60 லட்சம் வரையிலும், அடமானத்தின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை 8,987 விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.75 கோடியே 53 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர்க்கடன் வழங்க ஆண்டு குறியீடாக ரூ.220 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே, அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, பயிர்கடன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    எனவே, விவசாயிகள் நில உடைமை சிட்டா, அடங்கல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பான் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான போட்டோ ஆகிய ஆவணங்களுடன், தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை அளித்து, உறுப்பினராக சேர்ந்து வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று பயன் பெறலாம்.

    மேலும், வட்டியில்லா கால்நடை பராமரிப்புக்கடன், மாற்றுத்திறனாளிகளக்கு வட்டியில்லா கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், விவசாயம் சார்ந்த மத்திய காலக் கடன்கள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி கூட்டுறவுத்துறையின் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசால் செயல்படுத்தப்படுகிறது.
    • தேவாலயத்திற்கு ரூ.3 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசால் செயல்படுத்தப்படுகிறது.

    தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15-20 வருடங்கள் இருப்பின் ரூ.2 லட்சமும், 20 வருடத்திற்கு மேற்பட்ட தேவாலயத்திற்கு ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு, கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

    தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயத்தினை சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் (பிற்சேர்க்கை III ) அளிக்க வேண்டும்.

    சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

    விண்ணப்ப படிவத்தை பிற்சேர்க்கை II - III உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அவ்விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படையில் தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் கூடிய முன்மொழிவினை சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். மேலும், இப்பொருள் தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

    எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்து சீரமைத்து கொள்ள ஏதுவாக சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×