search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் தர்ணா"

    • கிராம பங்காளிகள் கோவில் முன்பாக தங்களையும் சாமி கும்பிட அனுமதிக்க கோரி கையில் பதாகைகள் ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அங்கு நடந்த கூட்டத்தில் இது சம்பந்தமாக பேசி முடிவெடுக்க பட்டு கோவிலுக்குள் சாமிகும்பிட அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டது.

    நத்தம்:

    நத்தம் அருகே வத்திபட்டியில் இருந்து லிங்கவாடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பொன்னர் சங்கர் கோவில் உள்ளது. இக்கோவிலில் காசம்பட்டி, வத்திபட்டி, கோமனாம்பட்டி, விளாம்பட்டி மற்றும் சாத்தாம்பாடி ஆகிய 5 கிராமங்களில் உள்ள கோவிலுக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் சேர்ந்து திருவிழா கொண்டாடுவர்.

    இந்நிலையில் இதில் சில கிராமத்தை சேர்ந்த வர்களுக்கு மட்டும் கோவிலில் சாமி கும்பிட அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளாம்பட்டி, கோமனா ம்பட்டி மற்றும் சாத்தாம்பாடி கிராம பங்காளிகள் கோவில் முன்பாக தங்களையும் சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் மற்றும் வருவாய்த்துறை யினர் தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களை தாலுகா அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். அங்கு நடந்த கூட்டத்தில் ஏற்கனவே இது சம்பந்தமாக பேசி முடிவெடுக்க பட்டு கோவிலுக்குள் சாமிகும்பிட அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டது. மேலும் சாமி கும்பிடுவது தொட ர்பாக யாரேனும்இடையூறு செய்தால் போலீஸ் நிலையத்தை அணுகலாம் என போலீசார் தெரி வித்தனர்.

    ×