search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுரவ கொலை"

    • கவுரவ கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தின.
    • கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்தாலும் தண்டனை விகிதம் 0.2 சதவிகிதம் என மோசமாகவே உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துளள்து. கவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெறும் பாகிஸ்தானில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகளை சர்வே எடுத்துக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. சாமா தொலைக்காட்சியின் புலனாய்வு பிரிவு நடத்திய கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

    பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்தாலும், தண்டனை விகிதம் 0.2 சதவிகிதம் என மோசமாகவே உள்ளது.

    2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, புதிதாக சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, நாடு முழுவதும் தினமும் சுமார் 12 பெண்கள் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

    பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கவுரவ கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தின.

    பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 4 ஆண்டுகளில் 1,957 கவுரவக் கொலைகள் பதிவாகியிருப்பதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×