search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக தம்பதி"

    • கோடை விழாவையொட்டி மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலா துறை சாா்பில் ஊட்டி படகு இல்லத்தில் படகுப் போட்டி நடைபெற்றது.
    • பெண்களுக்கான இரட்டையா் போட்டியில் சென்னையை சோ்ந்த பரணி, ஐஸ்வா்யா ஆகியோா் முதலிடத்தையும், நா்மதா, பிரியா ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பிடித்தனா்.

    ஊட்டி:

    மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா சிறப்பாக நடைபெறும். நடப்பு ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் கடந்த வாரம் காய்கறி கண்காட்சி தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நாளை (13-ந் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இந்நிலையில் கோடை விழாவையொட்டி மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலா துறை சாா்பில் ஊட்டி படகு இல்லத்தில் படகுப் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் ஆண்கள் இரட்டையா் போட்டி, பெண்கள் இரட்டையா் போட்டி, தம்பதி போட்டி, படகு இல்லத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கான போட்டி என தனித்தனியாக நடைபெற்றது.

    இதில், ஆண்களுக்கான இரட்டையா் போட்டியில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த நிஷாத், ஆசீப் ஆகியோா் முதலிடத்தையும், ஊட்டியைச் சோ்ந்த தேவா, சுபாஷ் ஆகியோா் இரண்டாம் இடத்தையும், கோவையை சோ்ந்த திருமூா்த்தி, நிதீஷ் ஆகியோா் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

    பெண்களுக்கான இரட்டையா் போட்டியில் சென்னையை சோ்ந்த பரணி, ஐஸ்வா்யா ஆகியோா் முதலிடத்தையும், நா்மதா, பிரியா ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பிடித்தனா். தம்பதியருக்கான போட்டியில் கா்நாடகத்தை சோ்ந்த மிா்துன் ஜெய், புரவி தம்பதி முதலிடத்தையும், ஒடிசாவை சோ்ந்த ஆட்நவாஸ், அல்பாகான் தம்பதி இரண்டாம் இடத்தையும் பிடித்தனா்.

    வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் கோப்பைகளை வழங்கி பாராட்டினாா். ஊட்டி கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

    கூடலூர் மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று தொடங்கியது. வருகிற 14-ந் தேதி வரை 3 நாட்கள் கண்காட்சி நடக்கிறது.

    ×