search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனியாமூர் பள்ளி"

    • ஜூலை 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது.
    • பள்ளியில் பயின்ற 2000 -க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13-ந் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி ஜூலை 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது. இதில் பள்ளி வளாகங்கள் முழுவதும் சேதமடைந்தது 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களும், காவல்துறை வாகனங்களும், தீயில் கருகி சாம்பலாகி போனது. பள்ளியில் உள்ள அலுவலகம் வகுப்பறைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு சேதம் அடைந்தது. பிறகு போராட்டக்காரர்களை விரட்டி அடித்து பள்ளி வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. பின்னர் இந்த வழக்கு சி பி சி ஐ டி மாற்றப்பட்டது.

    பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்களை தனிப்படை அமைத்து 350 -க்கும் மேற்பட்டவர்களை இதுவரை கைது செய்துள்ளனர். இந்த கலவரத்தால் பள்ளியில் பயின்ற 2000 -க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது மாணவர்களின் பெற்றோர் தரப்பில் பள்ளியை சீரமைத்து மீண்டும் திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் பத்து நாட்களுக்குள் சக்தி மெட்ரிக் பள்ளியை சீரமைத்து திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிப்பிரிவு அதிகாரியை நியமனம் செய்து அவர் தலைமையில் பள்ளியை 45 நாட்களுக்குள் சீர் அமைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் 68 நாட்களுக்குப் பிறகு பள்ளி சீரமைக்கப்படும் பணி தொடங்கப்பட்டது. இன்று காலை 6 மணி முதலே சீரமைக்கும் பணி தொடங்கியது பள்ளி கட்டிடங்கள், சேதம் அடைந்த பேருந்துகள், சேதமடைந்த மரங்கள், பள்ளியில் உள்ள சேதமடைந்த பொருள்கள், என அனைத்தையும் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×