என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தியால் தாக்குதல்"

    • தகாத வார்த்தைகளால் திட்டியதை தட்டி கேட்டதால் ஆத்திரம்
    • ஜெயிலில் அடைக்கப்பட்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் அடியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சித்ரா (வயது 45), இவர் சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் வீட்டுக்கு வெளியே நின்று உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது பெரிய முக்கனூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு மகன் கவியரசன் (20), புதுப்பேட்டை அருகே உள்ள கல்நார்சம் பட்டி கிழக்கு மேடு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மகன் கார்த்திக் ( 18 ), கோவிந்தன் மகன் விஜய் (20) மற்றும் சந்தைத் தோப்பு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் பிரதீப் குமார் ( 20 ) ஆகிய 4 பேர் சித்ராவின் உறவினர்களிடம் தகாத வார்த் தைகளால் திட்டினர்.

    இதனை சித்ரா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவியரசன் தான் வைத்திருந்த கத்தியால் சித்ராவின் தலை மீது தாக்கியதில் கீழே விழுந்தார். அதன்பின்னர் அனைவரும் சேர்ந்து சித்ராவை காலால் எட்டி உதைத்து காயப்படுத்தினர். படுகாயம் அடைந்த சித்ரா சி கிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது சம்பந்தமாக சித்ரா கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஜெயச்சந் திரன் வழக்குப்பதிவு செய்து கவியரசன், விஜய் , மற்றும் பிரதீப் குமார் ஆகிய 3 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    இவர்களில் கார்த்திக் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×