என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணுடையநாயகி அம்மன்"

    • கண்ணுடையநாயகி அம்மன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளினார்.
    • இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேரோட்டம் நடந்தது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உள்ளது. தென் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் முக்கியமான கோவிலாகும்.

    இங்கு கடந்த மே மாதம் 24-ந் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்து டன் விழா தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய விழாவான வெள்ளி ரத புறப்பாடு நேற்று இரவு நடைபெற்றது.

    வண்ண மலர்களாலும் வண்ணமின் விளக்கு களாலும் அலங்கரிக்கப் பட்டவெள்ளி தேரில் தேரோடும் வீதிகளில் கண்ணுடைய நாயகி அம்மன் பவனி வந்தார். விழாவில் தென் மாவட்டங்க ளில் இருந்தும் மலேசியா சிங்கப்பூர் மற்றும் வெளி நாடு நகரத்தார் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

    இன்றுவெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் உத்திரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் பா. இளங்கோ, கண்காணிப் பாளர் ஜெயகணேசன், மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தார்கள்.

    முன்னதாக பக்தர்கள் காவடி எடுத்தும் கரும்பு தொட்டில் கட்டியும், முடி இறக்கி தங்களது வேண்டு தலை நிறைவேற்றினார்கள்.

    ×