search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடுங்காவல் தண்டனை"

    • குழந்தை திருமணம் செய்ய முயற்சி செய்யும் பெற்றோர் மற்றும் உறவி னர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
    • குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான உதவி எண்.1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    குழந்தை திருமணம் செய்யும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு எச்சரித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வாலிப்பட்டி அடுத்த நந்தகயம் கிராமத்தில் கடந்த மாதம் 29-ம் தேதியன்று குழந்தை திருமணம் நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில், விசாரணை மேற்கொண்டதில் குழந்தை திருமணம் நடைபெறு இருந்ததை உறுதி செய்து, திருமண ஏற்பாடுகள் அனைத்தும் சமூக நல களப்பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சைல்டு லைன் பணியாளர்கள் ஆகிய அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

    மேலும் மாவட்ட சமூக நல அலுவலக களப்பணியாளர்கள் மூலம் சம்மந்தப்பட்ட பெற்றோர்களுக்கும் மற்றும் ஊர் பொதுமக்களுக்கும் குழந்தை திருமணம் நடைபெறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    இம்மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு, மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் களப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சைல்டு லைன் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தை திருமண நடைபெறுவதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் ஆசிரியர்கள் அவர்களை கண்காணித்து உடனடியாக சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், குழந்தை திருமணம் செய்ய முயற்சி செய்யும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த சட்டத்தின்படி, 21 வயது நிறைவடைந்த ஆண், 18 வயதிற்கு குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டால், சட்டப்படி அந்த ஆணிற்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.1 லட்சம் வரை அபராதம் வழங்கி தண்டிக்கப்படுவர்.

    மேலும், குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மட்டுமின்றி, உறவினர்கள் மற்றும் திருமண நிகழ்ச்சியை பார்த்து தடுக்க முயற்சிக்காதவர்கள் என அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும்.

    எனவே, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான உதவி எண்.1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ×