என் மலர்
நீங்கள் தேடியது "ஒளிபரப்பு உரிமம்"
- கடந்த 2008-ல் ஒளிபரப்பு உரிம மதிப்பு ரூ. 6 ஆயிரம் கோடியாக இருந்தது.
- 2022ஆண்டு முதல் 5 ஆண்டு காலத்தில் ஒளிபரப்பு மதிப்பு ரூ.48,000 கோடியாக உயர்ந்தது.
பெங்களூரு:
இந்தியன் பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடுவதால் இந்த போட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் வர்த்தக ரீதியில் ஐ.பி.எல். போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை 16 சீசன்கள் நடைபெற்றுள்ளன.
ஐ.பி.எல். போட்டியை ஏராளமான ரசிகர்கள் பார்ப்பதால் ஒளிபரப்பு உரிம மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.
விளம்பர வருவாய் கோடிக்கணக்கில் கிடைப்பதால் ஒளிபரப்பு உரிமத்தை பெற கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 2008-ல் ஒளிபரப்பு உரிம மதிப்பு ரூ. 6 ஆயிரம் கோடியாக இருந்தது. 2022ஆண்டு முதல் 5 ஆண்டு காலத்தில் ஒளிபரப்பு மதிப்பு ரூ.48,000 கோடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.4.16 லட்சம் கோடியை எட்டும் என்று ஐ.பி.எல். தலைவர் அருண்துமல் தெரிவித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
கடந்த 15 ஆண்டுகளில் ஐ.பி.எல். போட்டி கடந்த வந்த பாதையையும், தற்போது ரசிகர்களிடம் இருக்கும் மதிப்பையும் பார்க்கும் போது 2043-ல் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்புக்கான உரிம மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
ரசிகர்கள் ஈடுபட்டை அதிகரிக்கும் வகையில் கிரிக்கெட்டை புதிதாகவும், சிறப்பாகவும் மாற்ற வேண்டும்.
இதேபோல் அதன் தரத்தையும் அதிகரிக்க வேண்டும். இதனால் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. மகளிர் பிரமீயிர் 'லீக்' போட்டி தொடங்கி இருப்பது வருவாய் இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு அருண் துமல் தெரிவித்தார்.






