search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒன்பிளஸ் கீபோர்டு"

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கும் நிலையில், அதன் விவரங்கள் வெளியாகி வருகின்றன.
    • ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனம் கீபோர்டு ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 7 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்பிளஸ் கீபோர்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஒன்பிளஸ் கீபோர்டு புகைப்படமும் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி இந்த கீபோர்டு மெக்கானிக்கல் டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் வலைதளத்தில் உள்ள பிரத்யேக மைக்ரோசைட்-இல் இந்த சாதனம் டெஸ்டிங் நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படும் நிலையில், மார்ச் மாத வாக்கில் உற்பத்திக்கு வரும் என தெரிகிறது.

    இந்திய வெளியீட்டை தொடர்ந்து ஒன்பிளஸ் கீபோர்டு மாடல் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் கீபோர்டு வைட் நிற டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது. புகைப்படங்களின் படி ஒன்பிளஸ் கீபோர்டு ஃபன்ஷன், பேக்ஸ்பேஸ், டெலிட், பேஜ் அப் மற்றும் பேஜ் டவுன் பட்டன்களுடன், ரெட் நிற பட்டன் ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த கீபோர்டு "டபுள் காஸ்கெட்-மவுண்ட் செய்யப்பட்ட டிசைன்" கொண்டிருக்கும் என்றும் பிரத்யேக லேவுட் மற்றும் ப்ரோஃபைல் கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் கீபோர்டு மேக், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் என இருவித சாதனங்களுடனும் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் கீபோர்டு மேம்பட்ட, கஸ்டமைஸ் செய்யப்பட்ட அம்சங்கள், ஒபன்-சோர்ஸ் ஃபர்ம்வேர் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த கீபோர்டு RGB லைட்டிங் வசதி கொண்டுள்ளது.

    Photo Courtesy: 91Mobiles

    ×