search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்லை வன்முறை"

    கவுதமாலாவில் இருந்து திரண்டு வந்த அகதிகளில், சுமார் 350 பேர் வன்முறையில் ஈடுபட்டு எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு மெக்சிகோவிற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Mexico #CentralAmericanMigrants
    மெக்சிகன் சிட்டி:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் அகதிகளாக ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர்.

    இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவதை மெக்சிகோ தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடி விடுவோம் என்று எச்சரித்தார்.

    மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் ஏற்பாடு நடைபெறுகிறது. எல்லையில் 5,800 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு நாட்டு எல்லையில் காத்திருக்கும் அகதிகள் தங்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க வலியுறுத்தி வன்முறையில் ஈடுகின்றனர்.



    இந்நிலையில், கவுதமாலா நாட்டில் இருந்து சுமார் 2500 அகதிகள் நேற்று அதிகாலை மெக்சிகோவிற்கு வந்தனர். அவர்களை நாட்டிற்கு விடாமல் மெக்சிகோ எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். எல்லைக் கதவு மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

    மெக்சிகோவிற்குள் நுழைந்த சுமார் 350 பேரையும் போலீசார் தடுத்ததால் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். தெற்கு நகரமான மெடாபா டி டாமிங்கஸ் நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தை தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எல்லையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு அகதிகள் கட்டுப்படுத்தப்பட்டனர். #Mexico #CentralAmericanMigrants 
    ×