search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்னெர்"

    ஆஸ்திரேலிய ஓபனில் முன்னணி வீரர்களான ஜான் இஸ்னெர், எட்மண்ட் முதல் சுற்றோடு ஏமாற்றமடைந்து வெளியேறினார்கள். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னெர் சக நாட்டு வீரரான ரெய்லி ஒபெல்காவை எதிர்கொண்டார்.

    இதில் இஸ்னெருக்கு ஒபெல்கா கடும் சவாலாக விளங்கினார். முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஒபெல்கா 7 (7) - 6(4) என முதல் செட்டை கைப்பற்றினார்.

    2-வது செட்டிலும் இருவரும் 6-6 என சமநிலை பெற்றனர். இதனால் ‘டை பிரேக்கர்’ கடைபிடிக்கப்பட்டது. இறுதியில் ஒபெல்கா 7(8) - 6(6) என ஒபெல்கா கைப்பற்றினார்.


    எட்மண்ட்

    3-வது செட்டும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. ஆனால் இந்த முறை இஸ்னெர் (7)7 - 6(4) என 3-வது செட்டை கைப்பற்றினார். 4-வது செட்டும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஒபெல்கா 7(7) - 6 (5) என கைப்பற்றினார்.

    2 மணி நேரம் 58 நிமிடங்கள் போராடி இஸ்னெர் 6(4) - 7(7), 6(6) - 7(8), 7(7) - 6(4), 6(5) - 7(7) எனத் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான கைல் பெர்டிச்சை எதிர்கொண்டார். இதில் எட்மிண்ட் 3-6, 0-6, 5-7 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் டெல் போட்ரோ, ஜான் இஸ்னெர் காலிறுதிக்கு முன்னேறினார்கள். #USOpen2018
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்கா ஓபன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் ஜுயான் மார்ட்டின் டெல் போட்ரோ, 20-ம் நிலை வீரரான குரோசியாவின் போர்னா கோரிச்சை எதிர் கொண்டார். இதில் எந்தவித போராட்டமும் இன்றி 6-4, 6-3, 6-1 நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.



    மற்றொரு ஆட்டத்தில் 11-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னெர் 25-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை எதிர்கொண்டார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் என்பது போல் ஈடுகொடுத்து விளைாடினார்கள். இதனால் ஐந்து செட் வரை ஆட்டம் நீடித்தது. இறுதியில் இஸ்னெர் 3-6, 6-3, 6-4, 3-6, 6-2 என வெற்றி பெற்றார்.

    காலிறுதிகளில் நடால் - தியெம், டெல் போட்ரோ - இஸ்னெர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    ×