search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவம்பஞ்சு விலை வீழ்ச்சி"

    • இந்த ஆண்டு இலவம் பஞ்சு விளைச்சல் எதிர்பார்ப்புக்கு மேல் அதிகம் உள்ளதால் கடந்த மே மாதம் இலவம் பஞ்சு விலை மிகுந்த சரிவை அடையத் தொடங்கியது.
    • கல்கத்தா, கேரள மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டதால் இங்கு விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதி களான கொட்டகுடி குரங்கணி உத்தம்பாறை, சோலையூர், சிறக்காடு, போன்ற பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கருக்கும் மேல் இலவம் பஞ்சு விவசாயம் நடைபெற்று வருகிறது.

    தேனி மாவட்டத்தில் போடி மற்றும் வருசநாடு சுற்றுப்பகுதிகளில் இலவம் பஞ்சு மிகுந்த தரம் உள்ள தாகவும் பயன்படுத்துவதற்கு மருத்துவ குணம் உள்ளதால் மெத்தைகள், தலைய ணைகள், இருக்கைகள் போன்றவை தயார் செய்யப்படுகிறது. இவ்வகை தலையணைகள் உடலின் தட்பவெப்பத்தை சீராக வைக்கும் என்று நம்ப ப்படுகிறது. இதில் தயாரிக்க ப்படும் மெத்தைகள் மற்றும் தலையணைகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. இதனால் பஞ்சு மெத்தை, தலையணைகள் அதிக அளவில் பல்வேறு மாநில ங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகிறது

    பெரும்பாலும் கல்கத்தா மற்றும் கேரள மாநிலங்க ளுக்கு அதிக அளவில் இலவம் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இலவம் பஞ்சு உற்பத்தி விவசாயத்தை நம்பி சுமார் 50க்கும் மேற்பட்ட பஞ்சுப்பேட்டையில் இயங்கி வருகின்றன.

    250 க்கும் மேற்பட்ட மெத்தை தலையணை உற்பத்தியாளர்கள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட பஞ்சு பேட்டை தொழிலாளிகள் இலவம் பஞ்சு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    இலவம்பஞ்சு விலை அதிகரிப்பதும், குறைவதும் இதன் உற்பத்தி, விளைச்சல் மற்றும் ஏற்றுமதியைப் பொறுத்தே அமையும்.

    இந்த ஆண்டு இலவம் பஞ்சு விளைச்சல் எதிர்பார்ப்புக்கு மேல் அதிகம் உள்ளதால் கடந்த மே மாதம் இலவம் பஞ்சு விலை மிகுந்த சரிவை அடையத் தொடங்கியது.

    கடந்த மார்ச் மாதம் வரை கிலோ ரூ.320 வரை விற்ற முதல் தர இலவம்பஞ்சு கிலோ ரூ.200 முதல் ரூ.230 வரை வீழ்ச்சி அடைந்தது. ரூ. 140 வரை விற்கப்பட்ட விதையுடன் கூடிய சுத்தம் செய்யப்படாத இலவம் பஞ்சு கிலோ ரூ.75 முதல் ரூ.95 வரை விலை போனது.

    இதனால் ஏராளமான விவசாயிகள் காய்களை மரத்திலேயே விட்டு விட்டனர். மரத்திலேயே இலவம் காய் வெடித்து சிதறி பஞ்சு வீணாகிப் போனது.

    பெரும்பாலான விவசாயி கள் ஆடி மாதம் முடிந்து ஆவணி தொடங்கினால் திருமண முகூர்த்தங்கள் மற்றும் விசேஷ தினங்கள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் காய்களையும் பஞ்சு மூடைகளையும் இருப்பு வைத்துக் காத்திரு ந்தனர்.

    இந்நிலையில் போடியில் இருந்து அதிகளவில் இலவம்பஞ்சு கொள்முதல் செய்யும் கல்கத்தா, கேரள மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டதால் இங்கு விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. மேலும் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் தேவை குறைவின் காரணமாக தலையணை, மெத்தைகள், இருக்கைகள் தயாரிப்பு குறைந்து வியா பாரிகளும் பாதிக்கப்பட்டு ள்ளனர்.

    ×