search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்சிமொழி சட்டவாரம்"

    • 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட உள்ளது.
    • நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் வினீத் தொடங்கி வைக்கிறார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சிமொழி சட்ட வாரம் வரும் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் நடைபெறும். இந்த ஆட்சிமொழி சட்ட வார விழாவை வரும் 9-ந் தேதி திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு கலெக்டர் வினீத் தொடங்கி வைக்கிறார். இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. இதேபோல் 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாட்டம் நடக்கிறது.
    • கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சித்துறை யின் சார்பில் வருகிற 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்கும் விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்படுகிறது.

    அரசு அலுவலகங்களுக்கு ஆட்சிமொழி சட்டம், வரலாறு, அரசாணைகள், பிழையின்றி தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தல், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர்களுடன் பட்டி மன்றம், ஒன்றியம், வட்டம் அளவில் அரசுப் பணியாளர்கள், பொது மக்கள், தமிழ் அமைப்பு களுடன் ஆட்சிமொழிச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டம் ஆகியவை நடத்தி ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியை தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பங்கேற்று நடத்த தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரத்தினை சிறப்பாகக் கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×