search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் குறைதீர் கூட்டத்தில் பொது மக்கள் வழங்கிய 85 மனுக்கள்"

    • ரேஷன் குறைதீர் கூட்டத்தில் 85 மனுக்கள் பெறப்பட்டதில் 81 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 4 மனுக்கள் மீது விசாரணை நடைபெறுகிறது.
    • 4 மனுக்கள் மீது விசாரணை நடைபெறுகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், மண்மங்கலம், புகழூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை ஆகிய 7 வட்டங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு, ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை தீர்வு செய்து கொள்வதற்காக நடைபெற்றது.

    கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் சந்தானசெல்வன் தலைமையில் நடத்த கூட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி பங்கேற்று ஆய்வு செய்து மனுக்கள் பெற்றார். மண்டல துணை வட்டாட்சியர் குணசேகரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மணிவண்ணன், தேர்தல் துணை வட்டாட்சியர் நீதிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் 25 மனுக்கள வரப்பெற்றதில் 24க்கும், கிருஷ்ணராயபுரத்தில் நடந்த முகாமில் 12 மனுககள் வரப்பெற்றதில் 11க்கும் தீர்வு காணப்பட்டன.

    மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, 7 வட்ட வழங்கல் அலுவலகங்களில் மொத்தம் 85 மனுக்கள் வரப்பெற்றன. இவற்றில் 81 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன, 4 மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

    ×