search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறுவடை எந்திரங்கள்"

    • உழவன் செயலி மூலம் பயன்படுத்த கலெக்டர் வேண்டுகோள்
    • வாடகை விவரங்கள் தெரியாததால் விவசாயிகள் நெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு பெறுவதில் சிரமம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்ப ட்டு இருப்பதாவது:-

    வேளாண்மைப் பொறியியல் துறையின் உழவன் செயலியானது அறுவடை எந்திரங்கள் விவரம் பதிவேற்றம் செய்யவும், வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்கவும், கால விரயத்தை தவிர்க்கவும், பண்ணைப் பணியாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் இன்றியமையாததாக உள்ளது.

    அறுவடை காலங்களில் மாவட்டத்தில் உள்ள நெல் அறுவடை எந்திரங்களின் விவரங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள எந்திரங்களின் விவரங்கள், வாடகை விவரங்கள் தெரியாததால் விவசாயிகள் நெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு பெறுவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தமிழக விவசாயிகள் குறித்த காலத்தில் நெல் அறுவடை செய்ய ஏதுவாக தனியாருக்கு சொந்தமான நெல் அறு வடை எந்திரங்களின் உரிமையாளர் பெயர், முகவரி, செல்போன் விவரங்கள் வட்டாரம் மற்றும் மாவட்டம் வாரியாக உழவன் செயலியில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், தக்கலை, குருந்தன்கோடு, திருவட்டார், கிள்ளியூர் வட்டாரங்களுக்கு மொத்தம் 13 சக்கர வகை மற்றும் 7 டிராக் வகை அறுவடை எந்திரங்களும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அறுவடை எந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அறுவடை எந்திர உரிமையாளர்களை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்களே வாடகை தொகை நிர்ணயம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×