search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருப்புக்கோட்டை நிர்மலாதேவி"

    அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பான உரையாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கல்லூரி செயலாளர் ராமசாமி, அருப்புக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சிங்கராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் கருப்பசாமியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, முருகனின் மனுவை விசாரணைக்காக 25-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


    ×