search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பன்னீர்செல்வம்"

    • ஏரியின் சுற்றுபுறங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வளாகமாக உருவாக்கப்படும்.
    • பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பெருமாள் ஏரி தூர் வாரும் பணி நீர் வளத்துறையின் சார்பில் ரூ.112.42 கோடி மதிப்பீட்டில் நடைபெறுவதை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    பெருமாள் ஏரியின் இயல்பான கொள்ளவு 574 மில்லியன் கன அடியாகும். தற்போது 228.86 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்போது தூர் வாரும் பணியின் மூலம் சுமார் 1.40 கோடி கனமீட்டர் அளவிளான மண் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மண் எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் ஏரியின் கொள்ளவு அதன் தற்போதைய கொள்ளவான 228.86 மில்லியன் கன அடியில் இருந்து 723.27 மில்லியன் கன அடியாக உயரும், எனவே இதன் மூலம் ஏரியின் இயல்பான கொள்ளவை விட கூடுதலாக 149.27 மில்லியன் கன அடி நீர் சேமிக்க இயலும்.

    பொருமாள் ஏரியின் மூலம் 6,503 ஏக்கர் விலை நிலங்கள் தற்போது வரை 1 போக சாகுபடிக்கு பாசன நீர் பெற்று வந்தது. இப்பணி முடிவுற்றதும் சுற்றியுள்ள விளைநிலங்கள் இருபோக சாகுபடிக்கு பாசன நீர்பெறும் வகையில் அமையும். இதுவரை சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் அடுத்த 3 மாதங்களில் முடிவடையும். ஏரியின் சுற்றுபுறங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வளாகமாக உருவாக்கப்படும்.

    மேலும் விவசாயிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று இந்த ஏரியில் இருந்து பிரியும் 11 பிரதான பாசன வாய்க்கால்களை தூர்வாரி சிறப்பான முறையில் பாசன வசதி ஏற்படுத்தி தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பாலசுப்ரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர் காந்தரூபன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×