search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி விளக்கம்"

    • ஒவ்வொரு பயிர் விதைக்கும் விதையில் அதிகபட்ச குறிப்பிட்ட ஈரப்பதம் மட்டுமே இருக்கலாம்.
    • உதாரணத்திற்கு நெல்லுக்கு 13 சதவீதம், சிறுதானியத்திற்கு 12 சதவீதம், பருப்பு வகை பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகளுக்கு 9 சதவீதம் மட்டுமே இருக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    விதை சேமிப்பில் விதை ஈரப்பதத்தின் பங்கு குறித்து கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்பதற்கேற்ப தரமான விதை உற்பத்தி செய்ய விதை உற்பத்தியாளர்கள் பயிர் விளைச்சலுக்கு தேவையான தொழில் நுட்பங்களை நல்ல முறையில் கடைபிடிக்க வேண்டும்.

    தரமான விதை என்பது சான்று பெற்ற விதைகளாகும். அதாவது அவை குறிப்பிட்ட தர நிர்ணயித்திற்குள் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத் திறன் மற்றும் பிற ரத கலப்பு ஆகியவற்றை கொண்டதாகும்.

    உற்பத்தி செய்த விதைக்கு விதைச்சான்று பெறுதவற்கும், விதையை சேமிப்பதற்கும் ஈரப்பதம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பயிர் விதைக்கும் விதையில் அதிகபட்ச குறிப்பிட்ட ஈரப்பதம் மட்டுமே இருக்கலாம்.

    உதாரணத்திற்கு நெல்லுக்கு 13 சதவீதம், சிறுதானியத்திற்கு 12 சதவீதம், பருப்பு வகை பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகளுக்கு 9 சதவீதம் மட்டுமே இருக்கலாம். இவ்வாறு அதிகபட்ச ஈரப்பதம் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும்.

    சேமிக்கும் விதையில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதத்திற்கு மேல் இருந்தால் விதை சேமிப்பின் போது பூச்சிநோய் தாக்குதல் ஏற்படும்.

    விதையின் முளைப்புத்திறன் பாதிக்கப்படும். முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டால் அந்த விதை விதைப்பதற்கு ஏற்றதாக இருக்காது. அதனால் விதையின் முளைப்புத்திறனை பாதுகாக்க விதையின் ஈரத்தன்மை அறிந்து, விதைகளை தேவையான ஈரத்தன்மைக்கு கொண்டு வந்து சேமித்தால் விதைகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடிகிறது. இத்தரத்தை நிர்ணயப்பதில் விதைப் பரிசோதனை நியைம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    எனவே, விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதையின் ஈரப்பதம் அறிந்து கொள்ள விதைக்குவியலில் இருந்து 100 கிராம் விதை மாதிரி எடுத்து, காற்றுபுகாத பாலித்தீன் பைகளில் அடைத்து பயிர், இரகம், குவியல் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு அனுப்ப வேண்டும். முளைப்புத் திறன் மற்றும் புறத்தூய்மை ஆகிய விதைத்தரங்களையும் அறிந்துகொள்ள வேண்டியிருப்பின், தேவையான அளவு விதை மாதிரி எடுத்து ஈரப்பதம் அறிய வேண்டிய விதை மாதிரியுடன் இன்னொரு பையிலிட்டு பயிர், ரகம், குவியல் எண் ஆகியவை குறிப்பட்டு அனுப்ப வேண்டும்.

    முளைப்புத்திறன் மற்றும் புறத்தூய்மை ஆகிய விதைத்தரங்களையம் அறிந்துகொள்ள வேண்டிருப்பின் தேவையான அளவு விதை மாதிரி எடுத்து, ஈரப்பதம் அறிய வேண்டிய விதை மாதிரியுடன் இன்னொரு பையிலிட்டு, பயிர் இரகம், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, முகப்புக் கடிதத்துடன் ஒரு மாதிக்கு ரூ.80 வீதம் கட்டணத்துடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்தால், விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

    மேலும், விதை மாதிரியை, வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×