என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zontes"

    • சீன மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான சாண்டெஸ் இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை வெளியிட்டுள்ளது.
    • இரு மாதங்களுக்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இவற்றின் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சீனாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளர் சாண்டெஸ், இந்திய சந்தையில் தனது இருசக்கர வாகனங்கள் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் சாண்டெஸ் 350R விலை ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் என துவங்கிகிறது. சாண்டெஸ் 350T ADV மாடலின் விலை அதிகபட்சமாக ரூ. 3 லட்சத்து 57 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    குறைந்த விலையில் கிடைக்கும் சாண்டெஸ் 350R நேக்கட் பைக் விலை ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சாண்டெஸ் 350X ஸ்போர்ட் டூரர் விலை ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    சாண்டெஸ் GK350 கபே ரேசர் மற்றும் 350T ரோட்-சார்ந்த டூரர் விலைகள் முறையே ரூ. 3 லட்சத்து 37 ஆயிரம் மற்றும் ரூ. 3 லட்சத்து 47 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளாக்‌ஷிப் மாடல்களான 350T ADV அட்வென்ச்சர் பைக் விலை ரூ. 3 லட்சத்து 57 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 67 ஆயிரம் என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் சாண்டெஸ் சீரிஸ் மாடல்கள் கேடிஎம் 390 மற்றும் பிஎம்டபிள்யூ 310 ட்ரியோ, ராயல் என்பீல்டு 650 ட்வின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. கேடிஎம் மற்றும் ராயல் என்பீல்டு மாடல்கள் அதிக திறன் கொண்டிருப்பதோடு சாண்டெஸ் மாடல்களை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    ×