என் மலர்
நீங்கள் தேடியது "young youth arrested"
திருவையாறு:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தம்பட்டியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளம்பகுடியில் உள்ள தனது தாய்மாமா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அழகர் மகன் சரத்குமார் (வயது 24) என்பவர் திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இதுபற்றி இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்ததும் அவர்கள் இது தொடர்பாக பேசி இளம்பெண்ணுக்கு திருமண வயது வந்ததும் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறினர்.
இந்த நிலையில் சரத்குமார் வேறு பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் முதலில் விரும்பிய பெண்ணை திருமண செய்ய முடியாது என்று கூறி உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோர் திருவையாறு மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.






