என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl pregnant"

    ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காந்தல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 28). இவருக்கு திருமணமாகி விட்டது. டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மாமியார் வீடு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தில் உள்ளது. அங்கு பரசுராமன் வேலை வி‌ஷயமாக அடிக்கடி சென்று வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கனிமொழி (26) என்ற இளம் பெண்ணுக்கும், பரசுராமனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது பரசுராமன் ஆசைவார்த்தை கூறி கனிமொழியிடம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் கனிமொழி கர்ப்பமானார். தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் கனிமொழியை சந்தித்து பேசுவதை பரசுராமன் தவிர்த்து வந்தார். இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் கனிமொழி புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து பரசு ராமனை கைது செய்தார்.

    ×