என் மலர்

  நீங்கள் தேடியது "young girl death mystery"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலைவாசல் அருகே ஊர்க்காவல் படையை சேர்ந்த இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை அடித்துக்கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக பாட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காமக்காப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். ஆட்டோ டிரைவர். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வமீனா (வயது 26). இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

  தற்போது செல்வமீனா 2-மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கரு எதிர்பாராதவிதமாக கலைந்து விட்டது. இதனால் கோபம் அடைந்த கவியரசன், மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த செல்வமீனா வலி தாங்க முடியாமல் கதறி அழுதார்.

  நேற்று இரவு வீட்டில் செல்வமீனா திடீரென தூக்கில் பிணமாக தொங்கினார். தலைவாசல் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதையறிந்த அவரது பாட்டி வெள்ளையம்மான், தனது பேத்தி உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் வெள்ளையம்மாள் தலைவாசல் போலீஸ் நிலையத்திற்கு சென்று, தனது பேத்தியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம். அவருடைய சாவில் சந்தேகம் உள்ளது.

  எனவே செல்வமீனா சாவில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், முதற்கட்டமாக மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் செல்வமீனா பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

  செல்வமீனா சிறு வயதாக இருக்கும்போது, அவரது தாய் இறந்து விட்டார். இதனால் செல்வமீனா தனது பாட்டி வெள்ளையம்மாளின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்.

  பள்ளிப்படிப்பை முடித்த பின் அவர் சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார். கவியரசனும் அதே ஊர்க்காவல் படையில் தான் வேலை பார்த்து வந்தார். அப்போது தான் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஒரே இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

  இதையறிந்த ஊர்க்காவல் படை அதிகாரிகள், கவியரசனை பணியில் இருந்து நீக்கம் செய்தனர். இதனை தொடர்ந்து கவியரசன், செல்வமீனாவை திருமணம் செய்து கொண்டார்.

  இந்த நிலையில் செல்வமீனா திடீரென மர்மமான முறையில் இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

  ×