search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yaga pujas were performed for 3 periods"

    • விமானம் கோபுரத்தின் மீது உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றினார்கள்
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேத்துப்பட்டு :

    திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் அடுத்த நரசிங்கபுரம், கிராமத்தில் ஓசூர் அம்மன், கோவிலை புதியதாக புதுப்பித்து பஞ்சவர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை அமைந்து 5 யாக குண்டங்களில் 108 கலசம் வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து, 3 கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, மேளதா ளத்துடன் புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவில் விமானம் கோபுரத்தின் மீது உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றினார்கள்.

    இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ளவிநாயகர், நாக தேவதை, நவகிரக ஆகிய சன்னதிகளுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரைத் தெளித்தனர்.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சுகன்யாஸ்ரீதர், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் சேத்துப்பட்டு ஒன்றியக்குழு பெருந்தலைவர் பத்மாவதி சின்னகுழந்தை, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நரசிங்கபுரம் கிராம பெரியவர்கள், விழாக்கு ழுவினர், இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×