search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Xiaomi 14 SE"

    • சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கலாம்.
    • சீன சந்தையில் கடந்த மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சியோமி நிறுவனம் இந்த ஆண்டு சியோமி 14 மற்றும் சியோமி 14 அல்ட்ரா என இரண்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில், சியோமி நிறுவனம் மற்றொரு பிரீமியம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சியோமி 14 SE பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது சியோமி நிறுவனத்தின் சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று டிப்ஸ்டரான அபிஷேக் யாதவ் தெரிவித்துள்ளார். புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு தவிர இதன் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.

     


    சியோமி 14 SE மாடல் ஜூன் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீன சந்தையில் கடந்த மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி சிவி 4 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் இரண்டு 32MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. சியோமி சிவி 4 ப்ரோ மாடலில் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் வயர்டு சார்ஜிங், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலையை பொருத்தவரை புதிய சியோமி 14 SE மாடல் சியோமி 14 மற்றும் சியோமி 14 அல்ட்ரா மாடல்களை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய சியோமி 14 SE பற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    ×