search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wreck"

    • சின்னபிள்ளை என்பவருக்கு சொந்தமான குடிசை வீடும், படகும் கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
    • நாதல்படுகை கிராமத்துக்கு செல்லும் சாலை பெரும்பகுதி தண்ணீர் வேகத்தால் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து இல்லாத அளவுக்கு மாறி விட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல் ஆகிய திட்டு கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமானதால் தண்ணீரில் மூழ்கின.

    இதனால் கிராமங்களில் இருந்தவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டு நான்கு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் தண்ணீர் ஆறு நாட்களுக்குப் பிறகு வடிய ஆரம்பித்தவுடன் மீண்டும் முகாம்களில் இருந்து கிராம மக்கள் குடியிருப்புகளை நோக்கி திரும்பினர்.

    திரும்பிச் சென்று வீடுகளை பார்த்த பொழுது பல குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

    சின்னபிள்ளை என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு கொள்ளிடம் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

    அவருக்கு சொ ந்தமான படகும் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

    நாதல்படுகை கிராமம் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று விட்டது.

    மேலும் கரை அருகாமையில் உள்ள சில குடிசை வீடுகளை அகற்றும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆற்றுநீர் கிராமத்துக்குள் புகுந்து அதிவேகமாகச் சென்றதால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையிலிருந்து நாதல்ப டுகை கிராமத்துக்கு செல்லும் சாலை பெரும்பகுதி தண்ணீர் வேகத்தால் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து

    இல்லாத அளவுக்கு மாற்றி விட்டது. எனவே சாலையை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தோட்ட பயிர் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    கடந்த பத்தாண்டு கால வரலாற்றில் 45 நாட்களில் 3 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்த வருடம் மட்டுமே என்றும் இதனால் இந்த வருடம் மட்டும் 100 மீட்டர் தூரத்துக்கு நாவல் படுகை கிராமம் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

    கடந்த 10 ஆண்டு காலத்தில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    ×