என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worm in the meal"

    • வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
    • உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆரணி:

    ஆரணி அருகே சேவூர் மாமரம் பஸ் நிறுத்தம் அருகில் பிரபல சைவ உணவக ஓட்டலில் நேற்று மதியம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த உமேஷ் என்பவர் சாப்பிட சென்றுள்ளார்.

    கடை ஊழியர்கள் சாப்பாட்டை பரிமாறினார்கள். பின்னர் உமேஷ் சாப்பிட முயன்ற போது சாப்பாட்டில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது சம்பந்தமாக கடை ஊழியரிடம் கேட்டதற்கு சரிவர பதிலளிக்காமல் புழுவை அப்புறப்படுத்தி விட்டு சாப்பிடுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உமேஷ் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இது சம்பந்தமாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் அளித்தார். அதன் பேரில் வந்த ஆரணி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கைலேஷ்குமார் புழு இருந்ததாக கூறிய சாப்பாட்டை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பினார். மேலும் வாடிக்கையாளரை மிரட்டியதாக கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் மீது உமேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆரணியில் ஏற்கனவே பிரியாணி சாப்பிட்டு மற்றும் சிக்கன் தந்தூரி சாப்பிட்ட மாணவன் இறந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் கதையாகி வரும் இதுபோன்ற சம்பவங்கள் ஆரணி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை எடுப்பார்களா பொதுமக்கள் எதிர்பார்பாக உள்ளது.

    ×