என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World population control"

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • பொதுமக்களுக்கு விதைகளுடன் கூடிய மஞ்சள் பை வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கட்டுப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு ஊர்தியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

    முன்னதாக கூட்டரங்கில் உலக மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் குறித்த உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க அனைவரும் திரும்ப கூறி ஏற்றுக் கொண்டனர்.

    பின்னர் மக்கள் குறைத்தீர்வு கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு விதைகளுடன் கூடிய மஞ்சள் பையினை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், துணை இயக்குனர் மணிமேகலை, துணை கலெக்டர் தாரகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×