என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world junior championship"

    பெண்களுக்கான பாதுகாப்பு குறைபாடு தரவரிசையில் இந்தியா 4-வது இடத்தில் இருப்பதால், சுவிஸ் வீராங்கனை இந்தியா வர மறுத்துள்ளார். #WSF #WJSC
    உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலை, தாம்சன் ரியூட்டர்ஸ் என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் காங்கோவை அடுத்து 4-வது இடத்தில் இந்தியா இடம் பெற்றிருந்தது. தனியார் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும், உலக அளவில் இந்த ஆய்வு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து கொண்டிருக்கும் ஜூனியர் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தும், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டின் நம்பர் ஒன் வீராங்கனை ஆம்ப்ரி அலின்க்ஸ் (16) வர மறுப்பு தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அவரது பயிற்சியாளர் பாஸ்கல் கூறுகையில், சமீப காலங்களாகவே இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து பத்திரிக்கையின் வாயிலாக படித்த ஆம்ப்ரியின் பெற்றோர், பிள்ளையின் நலனில அக்கறை கொண்டு வர அனுமதி மறுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
    ×