என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's group increase"

    • அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
    • 2,508 பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    திருவள்ளுவர் இன்று உயிருடன் இருந்து இருந்தால் திராவிட மாடல் ஆட்சிதான் சிறப்பான ஆட்சி என எழுதி இருப்பார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லாரும் சமம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார்துறை மூலம் 4700 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்திலேயே மலைவாழ் மக்கள் மற்றும் நரிக்குறவர்களுக்கும் அதிக அளவில் ஜாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகல் நிறைநத் மாவட்டமான திருப்பத்தூரில் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டதை தட்டி எழுப்பி 2508 பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. பெண்களை படி படி என கூறிய இயக்கம் தி.மு.க. திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் அதிக பெண்கள் ஒன்றியக்குழு தலைவர்களாக பெண்கள் உள்ளனர்.

    திராவிடத்தையும் - ஆன்மீகத்தையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது. ஆன்மீகம் என்ற பெயரை கூறி யாரும் இங்கு கடை திறக்க முடியாது. 164 அர்ச்சர்களுக்கு தலா ரூ.1000 கொடுக்கும் திட்டம் இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. ரூ.11 கோடியில் 117 கோவில்கள் புரணமைக்கும் பணி நடந்து வருகிறது.

    மகளிர் சுயஉதவிக்குழுக்களை தமிழகத்தில் ஏற்படுத்தியது திமுக அரசுதான். அதிமுக ஆட்சியில் அது சீரழிக்கப்பட்டது.

    சுயஉதவிக்குழுக்கள்

    அதன்பின் வந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் 4 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழு இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் ஒரு லட்சம் மகளிர் சுயஉதவிக்குழு அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.கே.சதிஷ்குமார், நகரமன்ற தலைவர்கள் காவியா விக்டர், சங்கீதாவெங்கடேஷ், உமாபாய் சிவாஜி கணேசன், ஏஜாஜ் அஹமத், ஒன்றியக்குழு தலைவர்கள் எஸ்.சத்திய சதிஷ் குமார், விஜியா அருணாசலம், திருமதி திருமுருகன், சங்கீதாபாரி, வெண்மதி, சுரேஷ்குமார், நாட்டறம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நன்றி கூறினார்.

    ×