என் மலர்
நீங்கள் தேடியது "woman with children missing"
- அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 35), மகள் ஹாஷினி (14), மகன் ரீகன் (7). அய்யனார் பால் கறக்கும் தொழில் செய்து வருகிறார். ராஜேஸ்வரி அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அய்யனார் கண்டித்தார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்றுவிட்டார். திரும்பி வந்த பார்த்தபோது வீட்டில் இருந்த மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகள் சவுந்தர்யா (17). இவர் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.






