என் மலர்

  நீங்கள் தேடியது "woman rotten position"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணையாற்றில் அழுகிய நிலையில் 50 வயது பெண் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  காவேரிப்பட்டணம்:

  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த திம்மாபுரத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மாதேசன்.
  இவர் நேற்று அலுவலகத்தில் செல்லும் போது திம்மாபுரம் அருகே தென்பெண்ணையாற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக மிதந்து கிடப்பதை கண்டார். 

  இது குறித்து உடனே கிராம நிர்வாக அலுவலர் வனஜா விற்கு தகவல் தெரிவித்தார். சம்பவம் குறித்து வனஜா காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பரமணியனுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆனுப்பி வைத்தனர். 

  பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விவரம் தெரியவில்லை. இறந்து கிடந்த பெண் பச்சை நிற பாவாடையும், ரோஸ் கலரில் ஜாக்கெட்டு அணிந்து இருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், மாயமான பெண்கள் விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலும் அந்த பெண்ணை யாராவது அடித்து கொன்று விட்டு உடலை ஆற்றில் வீசி விட்டு சென்றனரா? அல்லது அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ×