search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Without permission of gravel"

    • திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம், அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குளம், கண்மாய், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன.
    • இந்த நிலையில் அனுமதியின்றி போலி அனுமதிசீட்டுகளை வைத்து நீர்நிலைகளில் மணல் திருடப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம், அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குளம், கண்மாய், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இப்பகுதிகளில் அரசு அனுமதிபெற்று மணல் அள்ளி வருகின்றனர்.

    இந்த நிலையில் அனுமதியின்றி போலி அனுமதிசீட்டுகளை வைத்து நீர்நிலைகளில் மணல் திருடப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்காக போலி அனுமதிசீட்டுகள் குறிப்பிட்ட நபர்கள் மூலம் பெற்றுவிடுகின்றனர். இதனைெகாண்டு கிராமங்களில் கிராவல் மணல் ஜே.சி.பி மற்றும் லாரிகளில் எடுத்துச்செல்கின்றனர்.

    போலீசார் சோதனையிடும்போது இந்த ரசீதை காண்பிக்கின்றனர். இதற்காக ரூ.1800 வசூல் செய்யப்படுகிறது. மேலும் அள்ளப்படும் மணல் லோடுக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகை கைமாறுகிறது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால் சில நேரங்களில் கிராமமக்களே வாகனங்களை சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். இருந்தபோதும் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    எனவே போலி அனுமதிசீட்டு மூலம் மணல் அள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×