என் மலர்
முகப்பு » Wimbleton 2018
நீங்கள் தேடியது "Wimbleton 2018"
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், கெர்பர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். #wimbledon2018
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
12-ம் நிலை வீரரும், 2 முறை சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா) 4-6, 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எட்மன்டை (இங்கிலாந்து) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ரபெல் நடால் (ஸ்பெயின்), நிஷிகோரி (ஜப்பான்), டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். 4-ம் நிலை வீரர் சுவரேவ் (ஜெர்மனி) அதிர்ச்சிகரமாக தோற்றார்.
11-ம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-4, என்ற நேர் செட் கணக்கில் ஒசாகாவை (ஜப்பான்) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். #wimbledon2018
×
X