search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wild elephant attacked"

    • காட்டுயானைகள் அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
    • தொடர்ந்து ரேசன்கடைகளை சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலம் மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக அரிசி கொம்பன் எனப்படும் யானை அடிக்கடி ரேசன் கடையை சூறையாடி அரிசி முழுவதையும் சாப்பிட்டு வருகிறது.

    கடந்த 8 ஆண்டுகளில் 15 முறை இந்த யானை ரேசன்கடையை இடித்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். நேற்று இங்கு புகுந்த காட்டுயானை குருசாமி என்பவரது வீட்டை இடித்து சேதப்படுத்தியது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிரடி விரைவுப்படையினர் விரைந்து வந்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். அரிசி கொம்பன் தாக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மூணாறில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட்டில் புகுந்த யானைக்கூட்டம் அங்கிருந்த ரேசன்கடையை உடைத்து சூறையாடியது.

    அங்கு 3 மூடைகளில் இருந்த கோதுமைகளையும் அவை தின்றது. தொடர்ந்து ரேசன்கடைகளை சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் பாதுகாப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×