search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife by pouring petrol on her"

    • கூலித் தொழிலாளியான அய்யாசாமி குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • அய்யாசாமி பெட்ரோலை மனைவியின் மீது ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றார்.

    கோவை, ஏப் 3-

    கோவை துடியலூர் அருகே உள்ள பெட்டதா புரத்தை சேர்ந்தவர் அய்யாசாமி(வயது54). கூலித் தொழிலாளி.

    இவரது மனைவி செல்வி(38). இவர்களுக்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான அய்யா சாமி தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவரது மனைவி செல்வி கடந்த 4 மாதங்களாக தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது மகனை அழைத்து வருவதற்காக செல்வி பிளிச்சி பஸ் நிறுத்தம் சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த அய்யாசாமி தனது மனைவியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.

    ஆனால் அதற்கு செல்வி மறுப்பு தெரிவித்து அவருடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அய்யாசாமி தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை செல்வியின் மீது ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செல்வியை மீட்டனர். பின்னர் இது குறித்து அவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அய்யாசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×