search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Waterway encroachment"

    • வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • அதிகாரிகள் விரைவாக வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொதுப் பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை, வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

    அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் காசிபாளையம், ஆலங்காடு, காயிதே மில்லத் நகர் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக ஆக்கிரமித்து வீடு கட்டி வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மாற்று இடம் மற்றும் வீடுகள் வழங்கி காலி செய்யப்பட்டுள்ளன.அவ்வகையில், நொய்யல் ஆற்றின் வடபுறத்தில் மாநகராட்சி கணக்குப்படி 97 வீடுகள், பொதுப்பணித்துறை கணக்குப்படி 135 வீடுகள் ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பது தெரிய வந்தது. இந்த வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆனால், யாரும் காலி செய்யவில்லை.

    இந்நிலையில் 56 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. அவ்வகையில் 9 குடும்பங்கள் அங்கிருந்து தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு வீடுகளை காலி செய்தனர்.மீதமுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு வழங்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோர்ட்டு உத்தரவுப்படி காலி செய்த வீடுகளை இடித்து அகற்றி தங்கள் வசம் எடுக்க அங்கு அதிகாரிகள் சென்றனர்.வீடு பெறுவதற்கான நடைமுறை குறித்து மீதமுள்ள குடியிருப்புவாசிகளிடம் விளக்கம் தெரிவித்த அதிகாரிகள் விரைவாக வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    ×