search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Watermelon sabja juice"

    வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று தர்பூசணி, சப்ஜா விதை சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி - 150 கிராம்,
    சப்ஜா விதை - 1 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
    தேன் - தேவைக்கு,
    புதினா இலை - சிறிது.



    செய்முறை :

    தர்பூசணியை தோல் விதை நீக்கி அரைத்துக் கொள்ளவும்.

    சப்ஜா விதையை சுடுநீரில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    தர்பூசணி ஜூஸ், ஊறிய சப்ஜா விதை, தேன், எலுமிச்சைச்சாறு, புதினா இலை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

    குளுகுளு தர்பூசணி சப்ஜா ஜூஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×