search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water tanks"

    • போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குழந்தைகளை துன்புறுத்தினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே உள்ள அம்பலமூலாவில் ஆதிவாசி மக்களுக்கு போக்சோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, போதைப்பொருட்களால் ஏற்படும் தீமை ஆகியவை குறித்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி நாராயணன் தலைமை தாங்கினார். தொடர்து 212 ஆதிவாசி மக்களுக்கு தண்ணீர் தொட்டிகள், போர்வை, துணி வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, ஆதிவாசி மக்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அவர்கள் அரசு வேலைகளில் சேர்ந்து உயர் பதவிகள் வகிக்க வேண்டும். பெண் குழந்தைகளை சிறுவயதில் திருமணம் செய்து கொடுத்தால் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தைகளை யாராவது பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைபொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், மரக்கார், தனிப்படை போலீஸ் ஏட்டுகள் சித்துராஜ், சுரேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×