search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water pipe burst"

    • பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் வரை தார்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ஜேசிபி இயந்திரம் மூலம் குழி ேதாண்டிய போது குடிநீர் பைப்புகள் நெடுகிலும் உடைந்துவிட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் வரை தார் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது .இந்த தார் சாலை விரிவாக்க பணியை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செய்து வருகிறார். இந்நிலையில் தார் சாலையின் ஓரத்தில் மாணிக்கநத்தம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய் பாதிக்கப்பட்டு அந்தக் குழாயின் வழியாக பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தார் சாலை விரிவாக்க பணிக்காக தார் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் குழி தோண்டப்பட்டு வருகிறது .

    இதன் காரணமாக தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி ேதாண்டிய போது குடிநீர் பைப்புகள் நெடுகிலும் உடைந்துவிட்டது. இதனால் மாணிக்கநத்தம் ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடிதண்ணீர் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    குடிநீர் குழாய் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்பொழுது தான் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து போடப்பட்டது. குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    அதேபோல் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு இருப்பது குறித்து ஊராட்சித் தலைவர் வேலுசாமி புகார் செய்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கேட்டு ஊராட்சி தலைவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .எனவே நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த குடிநீர் குழாய் மாற்றி பொது மக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

    ×