search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Level Decline"

    கடந்த 10-ந் தேதி 118.38 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து இன்று காலை 109.73 அடியாக இருந்தது. இதனால் கடந்த 10 நாட்களில் நீர்மட்டம் 9 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    சேலம்:

    கர்நாடாகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் பெய்த கன மழையால் அதே மாதம் 17-ந் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.

    19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது நீர்வரத்து அதிகரித்ததால் 27-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் நடப்பாண்டில் 4 முறை அணை நிரம்பியது.

    கடந்த 62 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் குறையாமல் உள்ளது. ஏற்கனவே கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ந் தேதி முதல் 2006-ம் ஆண்டு அக்டோபர் 6-ந் தேதி வரை தொடர்ந்து 428 நாட்கள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் குறையாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 9 ஆயிரத்து 119 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 9 அயிரத்து 96 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திக்கு காவிரி ஆற்றில் 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், 800 கன அடி கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு அடி வீதம் சரிந்து வருகிறது.

    கடந்த 10-ந் தேதி 118.38 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து இன்று காலை 109.73 அடியாக இருந்தது. இதனால் கடந்த 10 நாட்களில் நீர்மட்டம் 9 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×