என் மலர்
நீங்கள் தேடியது "Wastage water"
- கடந்த 6 மாதங்களாக புதுராமச்சந்தி ராபுரம் கிராமத்தில் சாக்கடை வடிகால் தூர்வார ப்படவில்லை.
- புதுராமச்சந்திராபுரம் கிராமத்தில் சாக்கடை வடிகால்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கண்ட மனூர் அருகே புதுராம ச்சந்திராபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாக்கடை வடிகால் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக புதுராமச்சந்தி ராபுரம் கிராமத்தில் சாக்கடை வடிகால் தூர்வார ப்படவில்லை. மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் வடிகால்களில் கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி காணப்படுகிறது.
சாக்கடை கழிவு நீரில் இருந்து கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் இரவு நேரங்களில் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேபோல மழை பெய்யும் நேரங்களில் சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ள்ளது. எனவே கண்டமனூர் ஊராட்சி நிர்வாகத்தினர் புதுராமச்சந்திராபுரம் கிராமத்தில் சாக்கடை வடிகால்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






