search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Washington state high school"

    • 4 மாணவர்களை கீழே தள்ளி விட்டனர்; ஒருவரை முகத்தில் குத்தினர்
    • பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது ஆபர்ன் ரிவர்சைடு (Auburn Riverside) உயர்நிலை பள்ளி.

    கடந்த திங்கட்கிழமையன்று மதியம் 01:00 மணியளவில் 6 முகமூடி அணிந்த நபர்கள், அப்பள்ளியின் பக்கவாட்டில் உள்ள கதவுகளின் வழியாக அப்பள்ளிக்குள் திடீரென உள்ளே நுழைந்தனர். அவர்கள் வேக வேகமாக அப்பள்ளியின் பல இடங்களுக்கு ஓடி, பல பள்ளி மாணவர்களை தாக்க தொடங்கினர்.

    4 மாணவர்களை கீழே தள்ளிய அவர்கள், ஒரு மாணவனின் முகத்தில் குத்து விட்டனர். இதையடுத்து அங்குள்ள மாணவர்கள் பயத்தில் அங்குமிங்கும் ஓட தொடங்கினர்.

    இதை கண்ட பள்ளி நிர்வாகத்தினர் அந்த முகமூடி மனிதர்களை துரத்த தொடங்கினர். அவர்களை கண்டதும் அந்த முகமூடிகள் பின்வாங்கி பள்ளியை விட்டு ஓடி விட்டனர்.

    அவர்கள் சென்றதும் உடனடியாக அந்த பள்ளியின் அனைத்து கதவுகளும் அடைத்து பூட்டப்பட்டு, பாதுகாப்பான முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

    அன்றிலிருந்து பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இச்சம்பவம் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் மனதளவில் பாதிப்படைந்துள்ள அவர்களில் பெரும்பாலானோர் ஒட்டு மொத்தமாக வகுப்பிற்கு வரவில்லை.

    செவ்வாய்கிழமையிலிருந்து மொத்தம் 532 மாணவ மாணவியர் பள்ளியிலிருந்து விடுப்பில் உள்ளதாக அம்மாவட்ட கல்வி துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

    மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அந்த முகமூடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. யார் அந்த முகமூடி அணிந்து வந்த நபர்கள் என்பதும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணமும் இதுவரை தெரியவில்லை.

    ×