search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "war crime investigation"

    போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு மீதான எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார் என இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா வெலிகாமா கூறியுள்ளார். #SriLanka
    கொழும்பு:

    கடந்த 2009-ம் ஆண்டு, விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்களை கொன்று போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவம் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்தநிலையில், இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா வெலிகாமா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதற்கு நாங்கள் அச்சப்படவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. சர்வதேச விசாரணை தேவையில்லை. நமது நீதித்துறையே விசாரணை நடத்தலாம்.

    அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது. இது கடினமான உண்மை. அதற்காக நாங்கள் அப்பாவி மக்களை கொன்றோம் என்று அர்த்தம் அல்ல. பழையதை தோண்டாதீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த ஆக்கப்பூர்வ செயல்களை பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×