என் மலர்

  நீங்கள் தேடியது "Wages Wages of Pottery Workers"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் அடுத்த கட்ட முடிவு மேற்கொள்ளப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
  • எவா்சில்வா் பாத்திர உற்பத்தியாளா்களுடன் 23 ந் தேதி பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது

  திருப்பூர் :

  திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் உள்ள பாத்திரத் தொழிலாளா்களுக்கான கூலி உயா்வு தொடா்பாக எவா்சில்வா், பித்தளை மற்றும் செம்பு பாத்திர உற்பத்தியாளா்களிடையே தொழிலாளா் துறை துணை ஆணையா் தலைமையில் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தையில் எந்தவிதமான முடிவும் ஏற்படவில்லை.இந்நிலையில் கூலி உயா்வு தொடா்பாக பித்தளை, செம்பு பாத்திர உற்பத்தியாளா்ளுடன் 21 ந் தேதியும், எவா்சில்வா் பாத்திர உற்பத்தியாளா்களுடன் 23 ந் தேதியும் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

  இந்நிலையில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டி சாா்பில் கூலி உயா்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஏஐடியூசி. அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு எல்.பி.எப். வேலுசாமி தலைமை வகித்தாா். இதில் பாத்திரத் தொழிலாளா்களின் கூலி உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் அடுத்த கட்ட முடிவு மேற்கொள்ளப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

  இக்கூட்டத்தில், ஏடிபி சாா்பில் தேவராஜ், சிஐடியூ சாா்பில் ரங்கராஜ், குப்புசாமி, எல்.பி.எப் சாா்பில் ரத்தினசாமி, ஏஐடியூசி. சாா்பில் செல்வராஜ், நாகராஜ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

  ×