search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vocational training centers"

    • கூடுதலாக புதிய தொழில் பிரிவுகள் துவங்கிக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.
    • ஐ.டி.ஐ.கள் இல்லாத நிலையில் ஒரு புதிய தனியார் தொழிற்பயிற்சி நிலையம் துவங்கலாம்.

    திருப்பூர் :

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பயிற்சிப் பிரிவின், வாழ்வியல் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வழிகாட்டுதலின்படி புதிய தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்குவ தற்கும்மற்றும்செயல்பட்டுக்கொண்டிருக்கும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் கூடுதலாக புதிய தொழில் பிரிவுகள் துவங்கிக் கொள்ள கீழ்காணும் வகைபாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

    மாவட்டத்தின் வட்டாரங்களில் ஐ.டி.ஐ.கள் இல்லாத நிலையில் ஒரு புதிய தனியார் தொழிற்பயிற்சி நிலையம் துவங்கலாம்.பயிற்சி வழங்கும் விதமாகஅனைத்து துறைகளிலும் நடைபெற்று க்கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி ஐ.டி.ஐ.கள், 4-பிரிவுகளுக்கு குறைவாக இருக்கும் நிலையில் புதிய தொழில் பிரிவுகள் துவங்க www.nimionlineadmission.in/iti என்ற இணையதளத்தில் வருகிற 25-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    ×