என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viveka Academy"

    தஞ்சையில் விவேகா அகாடமியின் நீட் பயிற்சி மைய கிளை திறப்பு விழா நடந்தது.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் காவேரி நகர் விவேகா அகாடமியின் நீட்பயிற்சி மையத்தின் 2-வது புதிய கிளையின் திறப்பு விழா நியூ ஹவுசிங் யூனிட்டில் உள்ள அக்சயா வளாகத்தில் நடந்தது. 

    இந்த புதிய கிளையை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். 

    நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜேந்திரன், விவேகா அகாடமி நிர்வாக அதிகாரி கார்முகில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் புண்ணியமூர்த்தி வரவேற்றார். 

    இந்த பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்விவேகா அகாடமி ஒருங்கிணைப்பாளர் வினோத் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    நிகழ்ச்சியை காரைக்குடி தென்றல் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிர்வாக இயக்குனர் ஹரிகரன் தொகுத்து வழங்கினார். இயக்குனர் இளவரசன் நன்றி கூறினார்.

    ×