என் மலர்
நீங்கள் தேடியது "Vishva Hindu Parishad Administrator"
விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த 2 போலீஸ்காரர்களை போலீசார் கைது செய்தனர். #Arrested
அம்பத்தூர்:
வில்லிவாக்கம் சிட்கோ நகர் 18-வது தெருவில் வசித்து வருபவர் பத்ரிநாராயணன். விஷ்வ இந்து பரிஷத் வடதமிழ்நாடு செய்தி தொடர்பாளராக உள்ளார். கடந்த 17-ந்தேதி இரவு வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பத்ரி நாராயணனின் சொகுசு காரின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துவிட்டு தப்பினர்.
இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கார் கண்ணாடியை உடைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். கார் கண்ணாடியை உடைத்தது தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் கிங்ஸ்லி ஜெயராஜ், அயனாவரத்தை சேர்ந்த ஊர்காவல் படை போலீஸ்காரர் அகஸ்டின் மற்றும் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் போலீஸ்காரர் கிங்ஸ்லி ஜெயராஜின் சகோதரரின் வீடு பத்ரி நாராயணன் வீடு அருகே உள்ளது. பத்ரி நாராயணன் காரை வீட்டு வாசலில் நிறுத்துவது தொடர்பாக அவருக்கும், கிங்ஸ்லி ஜெயராஜின் சகோதரருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையறிந்த கிங்ஸ்லி ஜெயராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கார் கண்ணாடியை உடைத்தது தெரிந்தது. #Arrested